நாற்பது வயதாகிவிட்டது? உஷார்
பெண்கள் நாற்பது வயதை நெருங்கும் போது ஹார்மோன் மாற்றங்களால், உடலின் வளர்சிதை மாற்றம் குறைவது முதற்கொண்டு, பல மாற்றங்கள் ஏற்படும். இதன் விளைவாக உடல் எடை
அதிகரிப்பு, மூட்டு வலி, இதய நோய், சர்க்கரை நோய், மற்றும் சிலவகை புற்று நோய்கள் போன்ற பல உபாதைகளுக்கு ஆளாகிறார்கள்.
இவற்றை எல்லாம் எதிர்கொண்டு நல்ல உடல் மற்றும் மன நலத்தைப் பெறுவது சாத்தியமே. அதற்கு சில எளிய வாழ்வியல் மாற்றங்களை கடைபிடித்தாலே போதும். செய்ய வேண்டிய மாற்றங்களில் மிக முக்கியமானது
உணவு பழக்கத்தில் தான். அன்றாடம்
சாப்பிடும் உணவில் புரதம், மாவுசத்து,
வைட்டமின்கள், தாது உப்புக்கள்
போன்றவை தேவையான அளவு
இருத்தல் அவசியம்.
இதுவரை நீங்கள் சரியான உணவு
முறையை கடைபிடிக்கவில்லை
யெனில், இப்போதிலிருந்து சத்தான
உணவுகளை சேர்த்துக்கொள்ளுங்கள்.
பலவகையான காய்கறிகள், பருப்பு
மற்றும் பயறு வகைகள், கீரைகள் உணவில் அன்றாடம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை.
தினமும் ஏதாவது ஒரு பழத்தை அவசியம் சாப்பிடுங்கள். முழு தானியங்களை கட்டாயம் சேர்த்துக்கொள்ளுங்கள்.
அதிக கொழுப்பு இல்லாத பால் பொருட்களை உண்ணுங்கள். கோழி இறைச்சி, கடல் உணவுகள்,
முட்டை, சோயாப் பொருட்கள், எண்ணெய்வித்துக்கள்
மற்றும் கொட்டைகளை உணவில் தவிர்க்காமல் சேர்த்துக்கொள்ளுங்கள். கால்சியம், பொட்டாசியம், நார்
சத்து, வைட்டமின் 'ஏ' மற்றும் 'சி' போன்ற சத்துக்கள்உணவில் கட்டாயம் இருக்க வேண்டியவை. எனவே
சத்துள்ள உணவுகளை சாப்பிடுங்கள்.
காலை உணவை சாப்பிடாமல்
இருப்பதை தவிர்த்துவிடுங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள். எட்டுமணி
நேர நிம்மதியான தூக்கம் இருக்கு மாறுபார்த்துக்கொள்ளுங்கள். நிறைய
தண்ணீர் பருகுங்கள். இவற்றையெல்லாம் சரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக