மார்பக புற்றுநோயைத் தடுக்கும்
'ஒமேகா-3' கொழுப்பு அமிலங்கள்
நமது உடல் ஆரோக்கியமாக இயங்க மிகவும் தேவையான கொழுப்பு அமிலங்களுள் முக்கியமானவை ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள். இவற்றை நம் உடலால் தயாரிக்க முடியாது.
உணவு மூலம் மட்டுமே பெறமுடியும். 'ஒமேகா-3' கொழுப்பு அமிலங்கள்
மூளையின் செயல்பாட்டுக்கும், பார்வைத்திறனுக்கும் முக்கியமானவை. கர்ப்பிணிப் பெண்களுக்கும் பாலூட்டும்
தாய்மார்களுக்கும் இவை போதுமான அளவு கிடைக்கவில்லையென்றால், அது குழந்தையின் அறிவுக்கூர்மையை பாதிக்கும். இவை பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய், மன
அழுத்தம், குழந்தைகளுக்கு ஏற்படும் மூளைவளர்ச்சி குறைபாடு போன்றவற்றை தடுப்பதோடு, சில
வகை நோய்கள் ஏற்படாமலும் காக்கின்றன.
'ஒமேகா-3' கொழுப்பு அமிலங்
கள் நமக்கு எளிதில் கிடைக்கும் பல
உணவுகளில் அதிக அளவில் உள்ளன. சோயாபீன்ஸ், வால்நட் (அக்ரூட்),
மத்திமீன், மீன் எண்ணெய், ஆளி விதை, முட்டை,கீரை வகைகள், முளைகட்டிய தானியங்கள், பால் மற்றும் பால் பொருட்கள் குறிப்பாக 'பச்சை புல்
சாப்பிடும் விலங்குகளின் பால்' போன்றவற்றில் அதிகம் உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக