சங்கு பூ வின் மருத்துவபயன்கள்
புளூ டீ (Butterfly Pea Tea) :-
உடல் ஆரோக்கியத்துக்கு பாதிப்பை
ஏற்படுத்துகிறது என்ற காரணத்தால் டீ காபி அருந்தும் நீண்ட கால பழக்கத்தையே பலரும் தவிர்த்து விட்டனர். சிலர் அதன் தொடர்ச்சியாக
'கிரின் டீ' போன்ற பானங்களை அருந்துவதை வழக்கமாக
கொண்டுள்ளனர். உடல் எடையைச்
சீராக வைத்து கொள்ள 'கிரின் டீ' உதவி
புரிவதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
தினமும் காலையில் பருகுவதால் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் வெளியேற்றப்பட்டு,புத்துணர்ச்சி ஏற்படுவதாகவும் அவர்கள்
குறிப்பிட்டுள்ளார்கள். அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடலில் கெட்ட கொழுப்பு சேர்வதைத் தடுக்கிறது. அதேபோல இயற்கை ஆர்வலர்களால் குறிப்பிடப்படும் இன்னொரு
வகை 'புளூ டீ ' (Blue Tea) ஆகும். அதன்
பெயருக்கான காரணம், நீல நிற சங்குப் பூவின் (Blue Pea Flower) மூலம் தயாரிக்கப்படுவதாகும்.
புளூ டீ-யின் மருத்துவபயன்கள் :-
Blue Tea Benefits :-
ஒவ்வொரு பூவுக்கும் குறிப்பிட்ட மருத்துவக்குணம் இருக்கிறது.
அதன் அடிப்படையில்,பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட நீல
நிற சங்குப் பூ (Sangu Poo) கொண்டு தயாரிக்கப்படும் 'புளூ டீ'
டீ' உடல் நலனுக்கு ஏற்றதாக
சொல்லப்படுகிறது.
அதில் 'ஆன்டிகிளைகோஜன்' இருப்பதால் வயது முதிர்வை தடுத்து, இளமையைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. முதலையின் மேற்பாகத்தில் அமைந்துள்ள நுண்
துளைகளில் ரத்த ஓட்டத்தை சீராக்கி முடி
வளர்ச்சியை தூண்டக் கூடியது
Blue Pea Flower.- உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை நீக்கி கல்லீரலை பாதுகாக்கிறது.
நீரிழிவு நோயாளிகளின் உடலில் சர்க்கரை அளவை சீராகப் பராமரிக்க உதவுவதாகவும் ஆராய்ச்சிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'புளூ டீயில்' (Blue Tea) இருக்கும்
'ஃப்ளேவனாய்ட்ஸ்' என்ற ரசாயனம் புற்று நோயை உருவாக்கக்கூடிய செல்களை அழிக்கிறதாம். அத்துடன், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்றுக்களிலிருந்தும்
பாதுகாப்பதாக சொல்லப்பட்டுள்ளது.
கொழுப்பு நிறைந்த உணவு வகைகளைச் சாப்பிடும் பழக்கம் காரணமாக எடை அதிகமாக
உள்ள வர்களுக்கு 'புரூ டீ ' (Butterfly Tea) பெரிதும் உதவியாக இருக்கிறது. தேவையற்ற கொழுப்பை கரைத்து வெளியேற்றும் ஆற்றல்
அதற்கு உண்டு.
வேலைப்பளுவின் காரணமாக உரிய
நேரத்திற்குச் சரியாக சாப்பிட முடியாமல்
இருப்பவர்களுக்கு நாளடைவில் குடற்புண் பாதிப்பு ஏற்பட்டு விடலாம். அவர்களுக்கு பயன் அளிக்கக்கூடிய பானமாக 'புளூ டீ' (Blue Butterfly
Pea Tea) உள்ளது.
மேலும், Blue Pea Flower அஜீரணத்தை
குணமாக்குவதுடன். வயிற்றில் உண்டாகும் எரிச்சலையும் தடுக்கிறது.
அதுமட்டுமல்லாமல் உடலின் வெப்ப
நிலையைச் சீராக வைத்துக் கொள்ளவும் துணை புரிகிறது.
உடல் வெப்பம் சீரற்ற நிலையில் இருப்பவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் சுறுசுறுப்பாக செய்ய இயலாது.- குறிப்பாக, 'புளூ டீ' (Pea Tea) அருந்துவதால் ஏற்படும் நன்மைகளில் முக்கியமானது, மன அழுத்தத்தை தவிர்க்க உதவுவதாகும்.
'புளூ டீ ' தயாரிப்பது எப்படி
How to Make Blue Tea:-
கொதிக்க வைத்த தண்ணீரில் சில சங்குப்
பூக்களை (Butterfly Pea) போட்டு, 5 நிமிடம்
கழித்தவுடன் இறக்கி வடிகட்டிக்கொள்ள
வேண்டும். அதில் எலுமிச்சைச் சாறு சில
சொட்டுகள் விட்டு, தேவையான அளவு சுத்தமான
தேன் சேர்த்து சூடாகவோ அல்லது
குளிர்ச்சியாகவோ பருகலாம்.
முக்கிய குறிப்பு :-
கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் ,
சிகிச்சை பெறும் நோயாளிகள் ஆகியோர்
கட்டாயம் தரும் மருத்துவ ஆலோசனையின்றி
'புளு டீ' (Butterfly Tea) அருந்தக்கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக