வியாழன், 1 ஜூலை, 2021

நொறுக்குத்தீனியை தவிர்ப்பது எப்படி?

நொறுக்குத்தீனியை தவிர்ப்பது எப்படி? 
உணவு உண்ண அடம் பிடிக்கும் குழந்தைகள் பலர் சிப்ஸ், மிட்டாய் போன்ற நொறுக்குத் தீனிகளை கையில் இருந்து பறித்து சாப்பிடுவதை பார்க்கலாம். கடையில் வாங்கும் மிக்சர் முதல் சாண்ட்விச் வரை எத்தனையோ வகை நொறுக்குத் தீனிகளை குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் விரும்பி
உண்பார்கள்.

நொறுக்குத்தீனி அல்லது ஜங்க் ஃபுட் ஆரோக்கிய மற்றது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இதயப்
பிரச்சினைகள், உயர் ரத்த அழுத்தம் என்று பல நோய்களுடன் தொடர்புடையது நொறுக்குத் தீனி உண்ணும் வழக்கம். நொறுக்குத் தீனி சாப்பிடுவது மனச்சோர்வையும் அதிகரிக்கும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

கடையில் கிடைக்கும் ஸ்னாக்ஸ், துரித உணவுகள் இவற்றின் பின்னால் இத்தனை மோசமான விளைவுகள்
இருக்கிறது என்று அறிந்தும் நாம் ஏன் தொடர்ந்து அதையே சாப்பிடத் தேர்ந்தெடுக்கிறோம்?
ஏனெனில், நொறுக்குத்தீனிகள் ருசியை ஆதாரமாகக்
கொண்டிருக்கின்றன. சரியான கலவையில் உப்பு, சர்க்கரை மற்றும் கொழுப்பு இவற்றை சேர்த்து, நாவில்
உமிழ் நீர் சுரக்கும் படி இவை தயாரிக்கப்படுகின்றன.

மேலும் இவை கரகர மொறுமொறு என்று இருப்பதால் இவற்றை உண்ணும் போது மிகவும் ரசிக்கும்படியாக இருக்கின்றது. வீட்டிலேயே நீண்ட நேரம் அடைபட்டி
ருப்பது, உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்வது அல்லது டி.வி. பார்ப்பது போன்ற காரணங்களாலும்
நொறுக்குத் தீனிகளின் தேவை அதிகரித்து உள்ளது. இவற்றை ஒரே நேரத்தில் விழுங்க வேண்டிய கட்டாய
மில்லை. சுவையாக ஒவ்வொன்றாக சாப்பிடலாம்.

உணவு என்பது ஊட்டம், உடல் நலம் சார்ந்தது. அதில் அதிக ருசி என்பது எப்போதும் வாய்க்காது. சாதாரண மோர் சாதம், இட்லி, உப்புமா
போன்றவற்றை குழந்தைகள் விரும்பிச்சாப்பிடுவதில்லை. காரத்தை குழந்தைகளால் சகித்துக் கொள்ள முடியாது.

இனிப்புகள் பற்களை பாதிக்கும்.
எனவே இனிப்பும் இல்லாத, அதிக
காரமும் இல்லாத, சாதாரண ருசி
குறைந்த உணவுகளையே நாம்
குழந்தைகளுக்கு ஊட்டுகிறோம்.

உணவு என்பது ஊட்டம், உடல் நலம் சார்ந்தது.
அதில் அதிக ருசி என்பது எப்போதும் வாய்க்காது. சாதாரண மோர் சாதம், இட்லி, உப்புமா போன்றவற்றை குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவதில்லை. காரத்தை குழந்தை
களால் சகித்துக் கொள்ள முடியாது.
இனிப்புகள் பற்களை பாதிக்கும்.
எனவே இனிப்பும் இல்லாத, அதிக
காரமும் இல்லாத, சாதாரண ருசி
குறைந்த உணவுகளையே நாம்
குழந்தைகளுக்கு ஊட்டுகிறோம்.

• ஒரு வயதைத் தாண்டிய குழந்தைகள்
பல் முளைக்கும் போது, ஒரு துண்டு முறுக்கை கையில் கொடுத்தால்
விரும்பி சாப்பிடுவதை காணலாம். பிஸ்கட்டுகள் சலித்துப் போகும் போது முறுக்கையும், முறுக்கு சலித்துப் போகும்போது பழங்களையும் கொடுத்து பழக்கலாம்.

. சரியான இடைவெளிவிட்டு, சிறிய அளவில் ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு வந்தால் ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற தேடல் குறையும். அதனால் நொறுக்குத்தீனிகளை தவிர்க்கலாம்.

• கரகரவென்று சாப்பிடுவதற்கு சிப்ஸை தவிர்த்து வறுத்த நிலக்கடலை அல்லது பாதாம் போன்றவற்றை
கடித்து சாப்பிடலாம்.

• 'இட்லி போர்' என்று சொல்லும் குழந்தைகளுக்கு சட்னி-சாம்பார் என வெரைட்டி கொடுத்து உணவில்
சுவை கூட்டலாம்.

• இனிப்பு சாப்பிட வேண்டுமென்ற எண்ணம் வரும் போதெல்லாம் பழங்களை சாப்பிடலாம்.
முன்கூட்டியே திட்டமிட்டு ஆரோக்கியமான உணவு
களைத் தயாரித்து வைத்துக் கொண்டால் உடல் நலத்திற்கு கேடான உணவு வகைகளை தவிர்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சங்கு பூ வின் மருத்துவபயன்கள்

சங்கு பூ வின் மருத்துவபயன்கள் புளூ டீ (Butterfly Pea Tea) :- உடல் ஆரோக்கியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்ற காரணத்தால் டீ க...